Skip to content

நாடாளமன்ற உறுப்பினர்கள்: பின் தொடர்தலை ஒரு குற்றச் செயல் என்று பிரகடன படுத்தவும்.

கோலலும்பூர்: நாட்டில் உள்ள அனைத்து அறைகள் கட்சி நாடாளமன்ற உறுப்பினர்கள் பின் தொடர்தலை ஒரு கடுமையான குற்றச்செயல் என்று கருத வலியுறுத்தி உள்ளனர்.

“தற்பொழுது மலேசியாவில் இந்த பின் தொடர்தல்களை எந்தச் சட்டத்திலும் தெளிவாக விளக்கவோ அல்லது குறிப்பிட்டுவலியுறுத்தப்படவோ இல்லை,” என்று பத்து காவான் DAP நாடாளமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கடந்த வாரம் டேவான்ராக்யாட்டில் குடும்ப வன்முறை சட்டத்தின் 2017 மசோதவிற்கு விவாதிக்கும் பொழுது கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் மீது அளிக்கப்படும் அனைத்து விதமான பின் தொடர்தல்களையும் துன்புறத்தல்களையும் கடுமையாகஎதிர்க்க வேண்டும் என்றும் இவற்றை கடுமையான குற்றச்சாட்டாக கருதி குடும்ப வன்முறை சட்டம் மற்றும் தண்டணைக்குறியகூறியேடு சட்டத்தின் கீல் இவற்றை உடனடியாக அமல்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.

“பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ச்சியாகப் பின் தொடர்ந்து பிறகு அவர்களுக்குத் துன்புறத்தல்களை அளிக்க பெரும்பானவர்கள்முகனூல், “வாட்ஸ்-ஆப்” மற்றும் “வீச்சேட்” போன்ற முக்கிய சமூக வலையத்தலங்களைப் பயன் படுத்துகின்றனர் என்று அவர்மேலும் விவரித்தார்.

மற்ற நாடாளமன்ற உறுப்பினர்களும் இதுக்குறித்து தங்களின் ஆதங்கத்தை எதிர்ரொலித்தார்கள்.

“இந்த குறிப்பிட்ட சட்டம் பின் தொடர்தல்களை ஒரு குற்றச்சாட்டாக கருதவில்லை. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டபெண்கள் தங்களின் முன்னாள் கணவரால் தொடர்ச்சியாக்க் கண்காணிக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்கள் செல்லும் இடங்களைக்கண்ணோட்டமிட்டு அவர்களை மிரட்டுவது மட்டும் அல்லாமல் துன்புறுத்தவும் செய்கிறார்கள்,” என்று கோத்தா ராஜா அமானாநாடாளமன்ற உறுப்பினர் டக்டார் சித்தி மாரியா மாமூட் தமது ஆதங்கத்தை விவாகரித்தார்.

பாதிக்கப்பட்டவர்களைப் பின் தொடர்ந்து துன்புறுத்தல்கள்  அளிப்பவர்கள் மட்டுமல்லாமல் துஷ்பிரயோகத்திற்கு உதவுகின்றமூன்றாம் தரப்பினரையும் இச்சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தேசிய முன்னெனி கட்சியான (பி.என்) தெபாராவ்நாடாளமன்ற உறுப்பினரான கூ சூ சீயாங் மக்கள் சபையில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், இதைப்பற்றி விவாதிக்கும் பொழுது, பி.கெ.ஆர் கட்சியின் கொம்பாக் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ முகாமட்அஸ்மின் அலி, “அமைச்சின் பார்வையில் பின் தொடர்ந்தல் மற்றும் துன்புறுத்தல் கடுமையான குற்ற செயலாக கருதப்பட்டுஇதை தண்டணைக்குரிய குறியேடு சட்டம் மற்றும் குடும்ப வன்முறை சட்ட மசோதாவின் கீழ் உள்ளடக்கப்படுமா அல்லதுஅசம்மந்தப்பட்ட அமச்சரைவைக்கு இது குறித்து வேறு ஏதாவது அபிப்பிராயம் அல்லது திட்டம் உள்ளதா?” என்ற கேள்வியைஎழுப்பினார். rachat de voiture hs RachatVotreVoiture.com

கொம்பாக் நாடாளமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தொ ஶ்ரீரொஹானி கரீம் “குடும்ப வன்முறை சட்ட மசோதாவில் சேர்த்துக்கொள்ளப் படுவதற்கு முன், இந்த பின் தொடர்ந்தல் மற்றும்துன்புறுத்தலை முதலில் அடயாளம் காண வேண்டும்.”  என்று பதில் அளித்தார்.

தேசிய முன்னணி கட்சியின் பாதாங் லுப்பார் நாடாளமன்ற உறுப்பினரான அமைச்சர் மேலும் இதைப் பற்றி விவரிக்கையில், தமதுஅமைச்சு இந்த பின் தொடர்தல் மற்றும் துன்புறுத்தல்களைக் கடுமையான குற்றச்சாட்டாக கருதிக் இதை சட்ட மசோதாவில்அமல்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதை மக்கள் அவையில் உறுதி படுத்தினார்.

“அரசாங்கம் பின் தொடர்தல் மற்றும் துன்புருத்தலுக்கான அடையாளத்தைக் கண்டரிந்து கூடிய விரைவில் இவைகளைக் குற்றச்செயலாக கருத நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று அமைச்சர் கடந்த செவ்வாய் கிழமை மக்கள் அவை கேள்வி நேரத்தில்விவாகரித்தார்.

மற்றொரு நிலவரத்தில், பின் தொடர்தல் மற்றும் துன்புறுத்தல்களை முழுமையான குற்றவியல் குற்றமாக அமல்படுதுவதில்தனிப்பட்ட முறையில் தமக்கு ஈடு இனையற்ற விருப்பம் உண்டு என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தகுறிக்கோளை நோக்கி பாடுபட அரசங்க சார்பாற்ற நிறுவனங்கள் மற்றும் சமூதாய ஆழ்வாளர்களின் ஒத்துழைப்பை நாடி அதற்கும்முயற்சி விறைவில் எடுக்கப்போவதாக அமைச்சர் மக்கள் அவையில் தெறிவித்தார்.

இதன் இடையே, பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) இந்த வலியுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு தங்களின் ஆதரவைவெளிப்படுத்தியது. பெண்கள் உதவி மன்றத்தின் தலைவர் கேரோல் சின் (WAO) சார்பில் தமது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டஅதே சமயத்தில் பின் தொடர்தலின் அபாயங்களை விரிவாக விளக்கினார்.

“பின் தொடர்வது மேலும் பலவிதமான கடுமையான வன்முறைகள் நடப்பதற்கு வழி வகுக்குகின்றது. சராசரியாக வன்முறைக்குஉட்படுத்தப்பட்டு பின் கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் 10 பெண்களிள் 9 பேர் அவர்கள் அறியாமல் பின்தொடரபப்ட்டு பிறகு கொடூரமான முறையில் கொலை செய்யப்ப்டுகிறார்கள் என்பதை கேரோல் மேலும் குறிப்பிட்டார்.

“இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், பின் தொடரப்பபடும் நபர்கள் தங்களுக்குப் பாதுக்காப்பு கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பல சம்பவங்களில் இவர்களைத் துன்புறுத்தி காயப்படுத்தியப் பிறகுதான் காவல்தங்களின் கடமைகளைச் செய்கிறார்கள்” என்று கேரோல் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்தார்.

ஆகவே, பின் தொடரப்பட்ட இடத்திலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுக்காப்பு  வழங்கப்பட இந்த நாட்டின்சட்டத்திட்டங்கள் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் பின் தொடர்பவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்கதண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதை கேரோல் மேலும் வலியுறுத்தினார்.

மற்றொறு நிளவரத்தில், சிங்கப்பூர், ஜாப்பன், யூனிதெட் கிங்டொம் மற்றும் பல அதிகார வரம்புகலற்ற நாடுகளில் பின் தொடர்தல்சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

###

Comments (0)

Leave a Reply

Back To Top