Skip to content

மனித உரிமைக்காக போராடும் வழக்குறைஞர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும்

Joint Action Group for Gender Equality (JAG)

மனித உரிமை வழக்குறைஞர் சிட்டி காஸிமின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைக்கைவிடும் படி அரசாங்க வழக்குரைஞர் மன்றத்தை பாலின சமத்துவத்திற்கான செயற்குழு எனப்படும் (JAG) வலியுறுத்தியுள்ளது. அரசாங்க அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததின் பேரில் அவரின் மீது அரசாங்க  வழக்குறைஞர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மற்றொரு நிலவரத்தில், திருநங்கைகள் மீது அமல் படுத்தப்படும் பாகுபாடான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அகற்றும் அதே சமயத்தில் சர்வதேச மனித உரிமைகள் தரத்திர்க்கிணங்க வேண்டும் என்பதையும் JAK மலேஷியா அரசாங்கத்திற்கு முன்மொழிந்தது.

சிட்டி காசிம் மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டைக் கைவிடுங்கள்.

சிடி காசிம் மனித உரிமைகளுக்காக வாதாடும் மிக பிரபலமிக்க ஒரு பெண் வழக்குறைஞர். இவர் பூர்விக மக்கள், பெண்கள் மற்றும் LGBT தரப்பினர்களுக்கான உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சிறந்த மனித நேயமிக்க வழக்குறைஞர் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 13 ஜூன் 2017-னில் இவர் அரசாங்க அதிகரிகள் தங்களின் கடமையைச் செய்வதிலிருந்துத் தடுத்ததற்காகக் செக்சன் தண்டனைக்குறிய குறியீடு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். கூட்டரசு பிரதேச இஸ்லாமிய விவகாரங்கள் துறை எனப்படும் (ஜாவி) திருநங்கைகள் கலந்துகொண்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் நடத்திய திடீர் சோதனையில் சட்டப்பூர்வமாக எதிர்த்து நியாயம் கேட்டதற்காக அவரின் மீது இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட நிகழ்வில், தான் ஒரு வழக்குரைஞர் என்பதையும் தமது பணியான வழக்கறிஞர் மற்றும் வழக்குறைஞர்க்கான வேலைகளைத்தான் செய்து கொண்டிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கடந்த 23 ஜூன் 2017-இல் நடத்தப்பட்ட விசாரணையில் சிடி காசிம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்தார். விசாரணையின் இறுதியில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதன் இடையே, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 22 ஆகஸ்டு 2017-யில் நடைபெறும். இவ்விசாரணையில் அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிடி காசிம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். அதே சமயத்தில் கூடியபட்ச அபராத தொகையாக RM 1௦, ௦௦௦ செலுத்த வேண்டும். மற்றொரு நிலவரத்தில், சிட்டி காஸிமின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சட்ட துறை நிபுணர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டு சட்ட துறை நிபுணர்களின் சுதந்திரத்தை மீறியதாக கருதப்படுகிறது. அதோடு மட்டும் இல்லாமல், இட்டாகிய குற்றச்சாட்டும் மற்றும் முன்னோடியான வழக்குகளின் ஆதாரங்கள் வழக்குரைஞர்களின் இயல்பானத் திறமைகளை வெளிப்படுத்த மிக பெரிய தடையாக விளங்கியது. இதன் அடிப்படையில் தங்களின் கட்சிக்காரர்களின் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை விசாரிக்க வழக்குரைஞர்களுக்குப் போதிய சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. ஏனெனில், எப்போது வேண்டுமானாலும் தங்களைக் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின் நீதி மன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த படுவார்கள் என்ற அச்சம் அவர்களை ஆர்ப்பரிக்கின்றது.

ஆகவே, வழக்குரைஞர்கள் தங்களின் கடமையைச் செய்வதற்கு முழுமையான சுதந்திறம் வழங்கப்படுதல் அவசியம். ஏனெனில் அப்போதுதான் இந்நாட்டில் மனித உரிமைகள் பாதுக்ககப்படும். அதே சமயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, நீதியும் நிலைநாட்டப்படும் என்பது திண்ணம்.  ஆதலால், சிட்டி காஸிமின் மீது தொடரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளை எந்தவித நிபந்தனைகளின்றி உடனடியாக ரத்து செய்யும்படி அரசாங்க வழக்குரைஞர் மன்றாட்டை முன்மொழிகின்றோம்.

திருநங்கைகள் சமூகத்தைப் பாகுபாடு படுத்துவதை நிறுத்தவும்.

இடையே மற்றொரு நிலவரத்தில், பாலின சமத்துவத்திற்கான செயற் குழு எனப்படும் (ஜக்) திருநங்கைகளின் சமூகத்தைக் கடுமையான சட்டதிட்டங்கள், கொள்கைகள் மற்றும் பாகுபாடான அமலாக்கங்கள் மூலம் ஒதுக்கவேண்டாம் என்று மலேஷியா அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது. அண்மையில், திருநங்கைகள் கலந்து கொண்ட ஒரு குறிப்பிட்டநிகழ்வில் அரசாங்க அதிகாரிகள் மேட்கொண்ட திடீர் சோதனையை எதிர்த்து நின்றுநியாயம் கேட்டதால் சிட்டி காஸிமின் மீது அபாண்டமான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதுப்போன்ற சம்பவம் மறுபடியும் நிகழக்கூடாது என்பதே பாலின சமத்துவத்திற்கான செயல் குழுவின் கோரிக்கை. மேலும், இத்தகையான பாகுபாடு நிறைந்த அமலாக்கமானது பாலின அடிப்படையில் கூட்டரசு அரசியல் அமைப்பு பாதுகாப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மனித உரிமை சட்டத்தின் படி வரம்பு மீறியதாக கருதப்படுகிறது.

உலகளாவிய அறிவிப்பில் கோடிட்டு காட்டிய மனித உரிமைகள் இணங்க திருநங்கைகளின் தனிப்பட்ட உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் பாகுபாடற்ற சட்ட அமலாக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தரத்தை மேம்படுத்தாதலால், அவசியமாக அனைத்து பாகுபடுத்தும் சட்டங்களையும் கொள்கைகளையும் ரத்து செய்யும் மாறு JAG மலேஷியா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்துடன், மலேஷியா சர்வதேச மனித உரிமைகளின் சட்டம் மற்றும் தரத்துடன் இணங்குவதை இது உறுதி செய்யும் என்பது நிச்சயம். சிடி காசிம் மீதான குற்றச்சாட்டு அனைத்துலக ஐக்கிய நாடுகளில் அமலாக்கத்தில் உள்ள வழக்குரைஞர்கள் முக்கிய பங்குகள் மற்றும் அடிப்படை கொள்கைகளை மீறியதாகும். தேசிய வழக்குரைஞர் மன்றம் அவருக்கு எதிராக பதிவு செய்த  குற்றச்சாட்டை உடனடியாக கைவிட்டு சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு இணங்க வேண்டும்.

மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளின் அழைப்புகளைக் கவனியுங்கள்.

இதன் இடையே, JAG பிற இயக்கங்களுடன் இணைந்து வழக்குரைஞர்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் பணியைத் திறன்பட செய்வதற்கான ஆவணங்களைத் தொடர்ந்து மலேஷியா அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் செய்து வருகிறது. இவை வழக்குறைஞர்கள் தங்களின் பணியை மேலும் திறன்படவும் எந்தவித தங்கு தடையின்றி தங்களின் சேவையை மக்களுக்கு வழங்கவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சிறிதேனும் ஐயம் இல்லை. இந்த இயக்கங்களில் தேசிய மனித உரிமை வாரியம் எனப்படும் (SUHAKAM), மலேஷியா பார், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் சுதந்திரத்திற்க்கான வழக்குறைஞர்கள் மன்றம் எனப்படும் (lawyers for liberty) போன்றவைக் குறிப்பிடத்தக்கது.

###

The Joint Action Group for Gender Equality (JAG) :

  1. Women’s Aid Organisation (WAO)
  2. All Women’s Action Society (AWAM)
  3. Association of Women Lawyers (AWL)
  4. Justice for Sisters
  5. Perak Women for Women (PWW)
  6. Persatuan Kesedaran Komuniti Selangor (EMPOWER)
  7. Persatuan Sahabat Wanita Selangor (PSWS)
  8. Sabah Women’s Action Resource Group (SAWO)
  9. Sisters in Islam (SIS)
  10. Tenaganita
  11. Women’s Centre for Change (WCC Penang)

Comments (0)

Leave a Reply

Back To Top