WAO celebrated its 40th anniversary on Friday, August 4th, 2023. Check out our special WAOZINE:…
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி நிறைநிறுத்துதல் அவசியம்.
குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொடூரமான முறையால் கொலைசெய்யப்பட்ட நுர்ஹிடாயா எ.காணியின் வழக்கிற்கு தகுந்த நீதி வழங்கிய உயர் நீதிமன்த்திறன் தீர்ப்பை பெண்கள் உதவி மையம் என்று அழைக்கப்படும் (WAO) வரவேட்கிறது . 20/01/2017 தேதியில் உயர் நீதி மன்றம் நுர்ஹிடாயாவின் கணவரான ஜமாலுட்டின் அலியை குற்றைவியல் நடைமுறை 302 பிரிவின் கீழ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு நுர்ஹிடாயா குடும்பத்தாரின் நீண்ட கால போராட்டத்திற்கு ஒருமுடிவு கிட்டியது. நுர்ஹிடாயாவிற்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்க அவர் குடும்பத்தார் அள்ளும் பகலும் பட்ட கஷ்டங்களுக்கு தற்கபாது விடை கிடைத்துள்ளது. ஜமாலுடின் கடந்த 2003 முதல் தொடங்கி சுமார் ஒரு (10 ஆண்டுகளாக) நுர்ஹிடாயாறவ உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார். நுர்ஹிடாயாவின் தலையை சுவற்றில் தொடர்ச்சியாக அடித்து சுவற்றில் மொதி துன்புறுத்தியுள்ளார். அதே சமயத்தில் தலை கவசம் மற்றும் மீன் பிடிக்கும் கருவி பயன்படுத்தி அடித்து கொடுமைகள் புரிந்துள்ளார். இதை விட கொடுறமயானது, நுரஹிதாயவின் கழுத்தை நெரித்து கொலைச்செய்ய முயன்றார். கடந்த 2009 முதல் 2013 வரை , நுர்ஹிடாயா மற்றும் அவரின் குடும்பத்தார் ஜமாலுட்டின் மீது காவல் துறையுடன் 10க்கு மெட்பட்ட புகார்களை செய்துள்ளார்கள்.
ஆனாலும் இவர்கள் செய்த அனைத்து புகார்கள் எந்த விதத்திலும் நுர்ஹிடாயா அனுபவித்த கொடுமைகளிலிருந்து அவரை விடுவிக்க இயலாமல் போனது.காவல் துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு நுர்ஹிடாயாவை அவரின் கொடுமைக்கார கணவரிடம் இருந்து காப்பாற்றி தகுந்த பாதுகாப்பு அளிக்க தவரினர் மெலும் காவல் துறையினர் இறடக்கால பாதுகாப்பு அறிக்கை எனப்படும் (IPO) சட்டத்தை மீறி நுர்ஹிடாயா மற்றும் அவரின் குடும்பத்திற்கு தொடர்ந்து பிரச்சனை மற்றும் துன்புறுத்தல்களை அழிதுவந்த ஜமாலுட்டினை கைது செய்யமறுத்துவிட்டனர்.
அதே சமயத்தில் நுர்ஹிடாயாவின் அண்டை விட்டார்கள் இவரின் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு தகுந்த உதவிகளை செய்ய முன்வரவில்லை மெலும் ஒரு வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம்மில் பலுருக்கு (சமுதாயத்திற்கு) இன்னும் குடும்ப வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது என்பதுதான். பலர் இந்த குடும்ப வன்முறைகறளை தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் பிரச்சனையாகவே கருதுகின்றனர். நுர்ஹிடாயாவின் சகோதரி கூறிய வாக்குமூலம் இந்த கூற்றை மெலும் நிருபிக்கிறது. தமது கணவர் அவரை அடித்து துன்புறுத்தும் சமயத்தில் நுர்ஹிடாயா பலமுறை கத்தி கூச்சல் போட்டு அண்டை விட்டர்களிடம் உதவிக்கரம் நாடியுள்ளார். ஆனாலும் அவர்கள் அதனை கண்டும் காணாததுமாய் தங்கள் சொந்த அலுவைகங்களை கவனிக்க சென்றுவிட்டார்கள்.
இந்த அனைத்து கொடுமைகளுக்கான உச்ச கட்டம் ஆனது கடந்த 17 மார்ச் 2013 திகதியில் நிகழ்ந்த கோரச்சம்பவம் . அன்றுதான் ஜமாலுட்டின் நுர்ஹிடாயாறவை கொலை செய்தார் . நுர்ஹிடடாயா இருந்த வாகனக்குள் வந்து அவரை கடுமையாக தாக்கி கொலை செய்தார் ஜமாலுட்டின். நுரஹிதாயவின் உடலில் உள்ள அனைத்து உள்ளுறுப்புகள் கடுமையான முறையில் தாக்கப்பட்டு முற்றாக சிதைக்கப்பட்டதாக மருத்துவ பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்தது.
நுர்ஹிடாயாவின் இந்த கொடூரமான மரணம் நமக்கு மிகுந்த வருத்தத்தை அழிக்றிது. இவரின் மரணம் தவிர்க்க பட்டிருக்க கவண்டிய ஒன்றாகும். காவல் துறையினர் மற்றும் அண்டை விட்டார்கள் சரியான நேரத்தில்.செயல்பட்டிருந்தால் இத்தகய கோரச்சம்பவம் நடந்திருக்காது. இந்த சமுதாயம் அவரை காப்பாற் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் , இன்று நுர்ஹிடாயா நம்முடன் இருந்திருப்பர் என்பது தின்னம் .
முதலில் ஒரு விஷயத்தை இங்கு நாம் தெளிவாக புரிந்துககொள்ள வேண்டும். குடும்ப வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்சனை அல்ல, அது ஒரு தண்டிக்கப்பட வேண்டிய கொடூரமான குற்ற செயல் ஆகும். குடும்ப வன்முறை குடும்பத்தின் அமைதி மற்றும் சுபிட்சத்தை சீர்குலைப்பது மற்றும் அல்லாமல் அது பெண்களின் எதிர்கால வாழ்க்கைய கேள்விக்குறிக்கு உட்படுத்திவிடும். பெண்கள் உடல் மனம் பாலியல் மற்றும் பொருளாதார ரிதியாக துன்புறுத்தப்பட்டால் அவை குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும். நுர்ஹிடாயாவின் இந்த மரணம் ஆனது குடும்ப வன்முறை ஒரு தண்டிக்கப்பட வெண்டிய குற்ற செயல் என்பதை நமக்கு தெள்ள தெளிவாக புரியறவைத்துள்ளது என்பதில்முறற்லும் ஐயம் இல்லை.
உங்களுக்கு தெரிந்த சுற்று வட்டாரத்தில் ஏதேனும் இத்தகய குடும்ப வன்முறை சம்பவங்கள் நடந்திருந்தால் உடனடியாக அதை தடுக்க முன்வாருங்கள். பெண்கள் உதவி மையம் (WAO) தொடர்புககாள்ள 03 7956 3488 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும். அல்லது உங்களின் தகவல்களை தீணாவுக்கு 018 988 8058 குறுந் தகவல் அனுப்பலாம். நுர்ஹிடாயாவின் மரணம் போல மற்றொரு கோரச்சம்பவம் இனியும் நிகழாமல் உறுதி செய்வாம். வரும் முன் காப்பதே சாலச்சிறந்தது.
This Post Has 0 Comments