Skip to content

குடும்ப வன்முறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை

அலிஸின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தும் பொது, இந்த கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதை அலிஸ் முற்றிலும் உணர்ந்தார்.

ஆகவே, அவர் 999 அவரச சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். இங்குதான் அலிஸிற்கு பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) சேவை மையத்தின் அவசரத் தொடர்பு எண் கிடைக்கப்பெற்றது. பிறகு, பெண்கள் உதவி மையத்தின் உதவியோடு, அலிஸ் தன் கணவர் அளித்த கொடுமைகளின் பெயரில் காவல் துறையுடன் புகார் செய்தார். இதனை தொடர்ந்து, அவருக்கு இடைக்கால பாதுக்காப்பு உத்தரவு வழங்கப்பட்டது. காவல் துறையினர் அவரின் புகாருக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்தனர். அது மட்டும் இல்லாமல், அவரை துணை அரசாங்க பொது வழக்கறிஞரைச் சந்திப்பதற்கான வசதிகளும்  ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதன் இடையே,  நீதிமன்றம் அலிஸீன் கணவருக்கு குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், பல முக்கியமான நபர்கள் மற்றும் அமைப்புகளின் வற்றாத ஆதரவினால்  அவருக்கு தகுந்த நீதி கிடைத்தது. அலிஸின் இந்த வழக்கிற்கு பல தரப்பினர் தங்கள் ஒத்துழைப்பை நல்கி இந்த வழக்கை அவருக்கு சாதகமாக வாதாடி நீதி கிடைக்க துணை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் உதவி மையம் (WAO) குடும்ப வன்முறை ஒரு பார்வை: சமுதாய பிரச்சனைக்கு சமுதாயத்தின் பிரதிப்பலிப்பு எனும் ஓர் ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த 21 கட்டுரைகளில்  அலிஸின் கட்டுரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு அறிக்கையில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை விரிவாக விவரித்துள்ளனர். அதோடு, இவ்வாறு அவர்கள் பாதுக்காப்பு நாடியதும் பின்பு இவ்வாறு அவர்களுக்கு தகுந்த நீதி வழங்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களையும் இந்த ஆய்வு அறிக்கையில் உள்ள கட்டுரைகள் தெளிவாக விவரித்துள்ளன. இந்த அறிக்கையில் உள்ள அனைத்து கட்டுரைகளும் நமக்கு உணர்த்திடும் உண்மை ஒன்றுதான்! சமுதாயத்தின் தொடர்ச்சியான பிரதிப்பலிப்பு மற்றும் மனிதநேயமும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை நிச்சயமாக மாற்றி அமைக்க முடியும் என்பதுவே.

குடும்ப வன்முறைக்கான விழிப்புணர்வின் பிரதிப்பலிப்பு மற்றும் மனிதநேயம் அரசாங்க சார்ப்பற்ற நிறுவனங்கள், காவல் துறை, சமூகநல இயக்கம் மற்றும் பிற அரசாங்க தரப்பினரிடம் மட்டுமே இருக்க வேண்டியதல்ல. அது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று பெண்கள் உதவி மையத்தின் வழக்கறிஞரும் இந்த அறிக்கையின் ஆசிரியருமான நதாஷா டண்டவாதி வலியுறுத்தினார். LPG masažas ir plaukų šalinimas lazeriu Vilniuje už gerą kainą salone Oblaka

இதன் இடையே, இந்த அறிக்கையில் குடும்ப வன்முறைகள் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளையும் பெண்கள் உதவி மையம் (WAO) இணைத்துள்ளது. இந்த ஆலோசனைகளை குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வை சமுதாயத்திற்கு மேலும் உணர்த்த ஒரு வழிக்காட்டியாக இருக்கும் என்பது திண்ணம். மேல் விவரங்களுக்கும் இந்த ஆய்வு அறிக்கை பதிவிரக்கம் செய்வதற்கும் நீங்கள் நாடவேண்டிய அகப்பக்கம் www.wao.org.my ஆகும்.

இதனைத் தொடர்ந்து, இந்த அறிக்கையோடு பெண்கள் உதவி மையம் (WAO) “நம்பிக்கை நிச்சயம் உண்டு” என்ற கலை கண்காட்சியும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த கண்காட்சி மஸ்ஜிட் ஜாமெக் LRT ரயில் நிலையத்தில் இம்மாதம் (மார்ச்) தொடங்கி வரும் மே மாதம் மத்தியில் வரை நடைப்பெறும். இந்த கண்காட்சியில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின்  கலைப்படைப்புகள், அவற்றின் விலை விவரங்கள் மற்றும்

Comments (0)

Leave a Reply

Back To Top