Women’s Aid Organisation, Press statement – 4 August 2022 Tabling of Law to #MakeStalkingACrime Welcomed…
பெண்கள் உதவி மையத்தின் குறும்படம் உலகில் மிகப் பெரிய மனித நேய திரைப்பட விழாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெண்கள் உதவி மையத்தின் குறும்படம் உலகில் மிகப் பெரிய மனித நேய திரைப்பட விழாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாளிதழ் செய்தி வெளியீடு 26 பிப்ரவரி 2015
பெண்கள் உதவி மையத்தின் (மலேசியாவில் குடும்ப வன்முறை : பாதிக்கப்பட்டவர்களின் மனக்குமுறல்) என்ற குறும்படம், 2015ஆம் ஆண்டின் அனைத்துலக ஒரே மனிதநேய ஆவண பட விழாவில் திரையீடு காண ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் விழா இவ்வருடம் பதினேழாவது முறையாக நடத்தப்படுகிறது. அனைத்துலக மனிதநேய ஆவண பட விழா, உலகத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் ஒரு முக்கிய விழா ஆகும்.
பெண்கள் உதவி மையத்தின் (WAO) 18 நிமிட குறும்படமானது மூன்று மலேசிய பெண்களின் கதையை உள்ளடக்கியது. இந்த குறும்படத்தில் எவ்வாறு இந்த மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. இந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரும் பல ஆண்டுகளாகக் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்துள்ளார்கள். இவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளைச் சகிக்க இயலாமல் இறுதியில் அதை எதிர்க்க துணிந்து தங்களின் மனக் குமுறல்களைப் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர்.
பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் சாலி வங்சாவிஜயா (Sally Wangsawijaya) இந்த வாய்ப்பு பற்றி விவரிக்கும் போது இவ்வாறு விளக்கம் அளித்தார்.
“குடும்ப வன்முறை என்பது எங்கேயும் எப்போதும் நடக்கலாம், அதற்கு எல்லைகள் கிடையாது. அதனால்தான் பெண்கள் உதவி மையத்தின் இந்த குறும்படம், உலகத்தில் மிக பிரம்மாண்டமான அனைத்துலக ஆவண பட விழாவில் திரையீடு காண தேர்ந்தெடுக்கப்பட்டதும் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி”
“ இந்த குறும்படத்தில் தங்களுக்கு நிகழ்ந்த குடும்ப வன்முறைகளை எந்த ஒரு சுயநலம் மற்றும் ஒளிவு மறைவு இல்லாமல் பாதிக்கப்பட்ட அந்த மூன்று பெண்களும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இந்த குறும்படம் குடும்ப வன்முறை எவ்வாறு நடக்கும் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை நமக்குத் தந்துள்ளது. அதே சமயத்தில், குடும்ப வன்முறையை எதிர்த்து போராட வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல ; மாறாக அது ஒரு சமுதாயத்தின் போராட்டமாகும். நாம் அனைவரும் குடும்ப வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என்ற உன்னதமான தகவலை இந்த குறும்படம் வழங்கி உள்ளது” என்று சாலி வங்சாவிஜயா மேலும் கூறினார்.
அன்றாடம் குடும்ப வன்முறை சம்பவங்களை நாம் காணவோ அல்லது கேட்பதோ இல்லை. ஆகவே, இந்த குடும்ப வன்முறையில் சம்மந்தபட்டவர்கள் முன் வந்து தங்கள் பிரச்சனைகளை முன்மொழியும் வரை ஒந்த பிரச்சனைகள் ஒரு முழுமையான தீர்வு காணாமல் தொடர்ந்து நம் சமுதாயத்திற்கு ஒரு கடும் சவாலாக இருக்கும். அதே சமயத்தில் சில தரப்பினர்கள் இந்த பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண்பதே இல்லை. இந்த கருத்துகளைதான் நம் குறும்படம் சமுதாயத்திற்கு உணர்த்துகிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த ஆலோசனை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவர்கள் பாதுகாப்பான ஒரு சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையைத் தொடரலாம்.
குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் மனக்குமுறல் என்ற குறும்படம் இதற்கு முன் மலேசியாவில் நடத்தப்பட்ட ஒரே உலக பங்காளர்கள் விழாவில் அதாவது KOSMOS மையத்தின் ஏற்பாட்டில் நடந்த சுதந்திர திரைப்பட விழாவில் திரையீடு காண வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த ஒரே உலக அனைத்துலக ஆவணப்பட விழாவில் மனிதநேயத்திற்கு உட்பட்ட பல விதமான தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு குறும்படங்கள் திறையிடப்படும். அவற்றில் குறிப்பிடத்தக்கது மனோவியல் ஆரோக்கியம் , கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதநேய மீறுதல்களுக்கான தகுந்த ஆதாரங்கள் மற்றும் பல. 2012 ஆம் ஆண்டுக்கான ஒரே உலக அனைத்துலக மனிதநேய ஆவணப்பட விழா, பராகுவே எனும் நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை நடைபெறும். (02/03/2015-11/03/2015). பிறகு சுமார் 33 Czech நகரங்களில் இந்த மாபெரும் விழா தொடர்ந்து நடைபெறும்.
இந்த வீடியோ பார்க்க https://www.youtube.com/watch?v=SvoK75WzHHYசெல்லவும்
Comments (0)