Skip to content

பெண்கள் உதவி மையத்தின் (WAO) தன்னார்வ தொண்டு ஆலோசகர்களுக்கான மனோவியல் பயிற்சி

நாளிதழ் செய்தி வெளியீடு, 7 மார்ச் 2015

மேல் விபரங்களுக்கு கிரிஸ்டின் யாப் (Kristine Yap) அவர்களைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.  kristine.wao@gmail.com

பெட்டாலிங் ஜெயா. பெண்கள் உதவி மையம் (WAO) தன்னார்வ தொண்டு ஆலோசகர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக ஒரு சிறப்பு பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆலோசகர் பயிற்சி பெண்கள் உதவி மையத்தின் முக்கிய நோக்கமான குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த உதவிகளைச் செய்வதற்கும் WAO  மையத்தின் சேவைகளைத் தொடர்ந்து விரிவு படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

சுமார் 80 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தங்களது விண்ணப்பங்களை எங்களது பெண்கள் உதவி மையத்திற்கு அனுப்பி உள்ளனர். அதே சமயத்தில் இன்று WAO நடத்தும் இந்த பயிற்சிக்கான சிறப்பு விரிவாக்க கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்கள்.

மனோவியல் துறை இறுதியாண்டு இளங்கலை பட்டபடிப்பை மேற்கொள்ளும் மாணவி கோ ஹுய் சன் (Koh Hui San) இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தமது விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார். அவர் இந்த பயிற்சி குறித்து விவரிக்கும் போது இவ்வாறு கூறினார்.

”இந்த பயிற்சி என்னைப் போன்றவர்களுக்குக், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த உதவிகளைப் புரிய ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது”.

“கூடுதலாக இப்பயிற்சி மூலம் கிடைக்கப்பெறும் அனைத்து திறன் மற்றும் தகவல்கள் எதிர்காலத்தில் நான் செய்யும் தொழிலுக்குப் பெரிய உதவியாக இருக்கும்,” என்று  கோ ஹுய் சன் மேலும் கூறினார்.

பயிற்சியாளர்கள் 30 மணி நேர மயிற்சிக்கு உட்படுத்த படுவார்கள். இவை பட்டறை மற்றும் தொழில்முறை பயிற்சிகளாக உங்களுக்கு வழங்கப்படும். இந்த தன்னார்வ ஆலோசகர் பயிற்சியில் பிரச்சனைகளை முழுமையாகப் பொருமையுடன் கேட்கும் திறன். பாதிப்பு மற்றும் தேவைகள் குறித்த மதிப்பீடு, பெண்கள் வன்முறை குறித்து முழுமையான புரிந்துணர்வு குறித்த பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்படும். அனைத்து பயிற்சிகள் பெண்கள் உதவி மையத்தின் பணியாளர்களால் சிறப்பான முறையில் கண்காணிக்கப்பட்டு வழிநடத்தப்படும். இவர்கள் தங்கள் துறையில் பல ஆண்டு அனுபவங்கள் பெற்று இந்த பயிற்சிகளை முறையாக வழிநடத்துவார்கள். பெண்கள் உதவி மையத்தை நாடி வரும் அனைவருக்கும் சிறந்த சேவை மற்றும் உதவிகளை வழங்குவது இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.

பயிற்சியை முடித்த அனைத்து தன்னார்வ ஆலோசகர்கள்  நம் பெண்கள் உதவி மையத்தின் ஆலோசகராகப் பணியாற்றலாம். இவர்கள் நம் உதவி மையத்தின் தொலைபேசி சேவை வழி எங்களுக்கு (+60379563488) வரும் அழைப்புகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இந்த தன்னார்வ ஆலோசகர்கள் நம் உதவி மையத்திற்கு உதவிக் கரம் தேடி அழைக்கும் பெண்களுக்கு நம் மையத்தின் சார்பில் ஆலோசனைகள் வழங்குவார்கள். எதிர்வரும் மூன்று (3) மாதத்திற்கு சுமார் 6 கட்டங்களாக இந்த பயிற்சிகள் நடத்தப்படும்.

பெண்கள் உதவி மையத்தின் நிர்வாக இயக்குநர் சுமித்ரா விஸ்வநாதன் இப்பயிற்சி குறித்து விவரிக்கும் போது இவ்வாறு கூறினார்:

“நம் பெண்கள் உதவி மையத்திற்கு நாள்தோறும் வரும் அழைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இத்தருணத்தில் பயிற்சி பெற்ற அனைத்து தன்னார்வ ஆலோசகர்கள் நம் பெண்கள் உதவி மையம் வழி பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தொடர்ந்து தரமான சேவைகளை வழங்க உதவி புரிவர். இதனால் எதிர்காலத்தில் மேலும் பல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடியும்”

“பொதுமக்களிடம் இருந்து மிகச் சிறப்பான ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. இத்தருணத்தில் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மற்றும் கலந்து கொள்ள விண்ணப்பித்த உங்கள் அனைவருக்கும் பெண்கள் மையத்தின் சார்பில் நன்றியை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

பெண்கள் உதவி மையம் (WAO), குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பலதரப்பட்ட உதவி மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் தற்காலிக பாதுகாப்பு, நேருக்கு நேர் மற்றும் தொலைபேசி மூலம் ஆலோசனை சேவை, பொதுநல சேவை போன்றவை குறிப்பிடதக்கதாகும்.

பெண்கள் உதவி மையம் ( WAO) குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு, பொதுநல சேவை மற்றும் மனோநல ஆலோசனை செவைகளையும் வழங்குகிறது. இதை தவிர்த்து, பெண்கள் மனித நேய உரிமைகளைப் பெறுவதற்குச் சட்ட ஆலோசனைகளும் நம் பெண்கள் உதவி மையத்தில் வழங்கப்படுகிறது. ஆகவே, நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உங்களுக்குத் தெரிந்த அல்லது சுற்றி உள்ளவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எங்கள் பெண்கள் உதவி மையத்திற்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

பெண்கள் உதவி மையம் ( WAO ) : 03 7956 3488 (ஆலோசனை தொலைபேசி சேவை)

தினா (Tina) : 018 988 8058 (குறுந்தகவல் சேவை மட்டுமே)

இணைந்து பலரின் வாழ்க்கையை மாற்றுவோம்.

This Post Has 0 Comments

Leave a Reply

Back To Top