Skip to content

WAO மனிதக் கடத்தல் மீதான சிறப்பு ஆய்வறிக்கை வெளியிடு செய்து உள்ளது, இந்த ஆய்வு அறிக்கை அரசங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பார்வைக்கு மற்றும் இல்லாமல் மனிதக் கடத்தல் மீதான இன் நாட்டின் இடைவேளை மிக்க சட்ட திட்டம் மற்றும் கொள்கைகளைத் தெளிவாக விவரித்து உள்ளது.

பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) அண்மையில் அதன் சமிபத்திய ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வு அறிக்கை “மலேசியாவில் மனிதக் கடத்தல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கண்ணோட்டம்” எனும் தலைப்பில் வெளியிடபட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆய்வு அறிக்கை wao.org.my என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெறுக்கடியிலிருந்து ஆதரவு மற்றும் தங்கும் இடவசதி செய்துத்தறும் அதே சமயத்தில், மனித கடத்தல்களால் பாதிக்கபட்டவர்கள் மற்றும் மேலும் பலவிதமான கொடுமைகளால் பாதிக்கபட்ட பெண்களுக்கு இத்தகைய உதவிகள், WAO செய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதன் இடைய, அண்மையில் வெளியிடபட்ட ஆய்வு அறிக்கையில், WAO மனிதக் கடத்தலில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துல்லது. அதே சமையத்தில், மனிதக் கடத்தளில் உல்ல பின்னனி, மனிதக் கடத்தளில் பாதிக்கபடக்கூடைய மக்கள் மற்றும் உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச நிலையில் மனிதக் கடத்தல்களை முறியடிக்க அமல்படுத்தப்படும். சட்ட திட்டங்களும் அதில் பாதிக்கபட்டவர்களுக்கு எவ்வாரு பாதுகாப்பு அழிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இந்த ஆய்வு அறிக்கையில் விரிவாக விளக்கிவுள்ளது.

‘மனித கடத்தல் என்பது மனிதர்கள் மீது  நடத்தப்படும் ஒரு விதமான உரிமை சுரண்டல். மனித நேயத்திற்கு புறம்பான இத்தகைய கொடுரமான செயல்கள், மனித கண்ணியம் மற்றும் நன்னெரி பன்புகளை வாழ்வின் ஆதாரமாகக் கடைப்பிடிக்கும் நம் நாட்டில் நடக்ககூடாது’, என்று பெண்கள் உதவி மையத்தின் முன்னால் வழக்கரிஞர் அதிகாரியும் இந்த ஆயிவின் ஆசிரியருமான லைனி வெசிச் மேலும் வழியுறுத்தினார் .

இதன் இடையெ, இந்த அறிக்கையின் மூலம் WAO அரசாங்கம் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கலுக்குச் சில முக்கிய பரிந்துரைகளை முன்மொழிந்துல்லது என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்கலுக்கு எதிராக பாதுகாக்கும் சட்டம் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்தி இத்தகைய கொடுரமான குற்றச் செயல்கலைப் புரிபவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும், மனிதக்கடத்தல்களால் பாதிக்கப்பட்டவற்களுக்கு  மேலும் பலவிதமான பாதுகாப்பு, நிதி மற்றும் ஆதறவை அழிக்க இந்த அறிக்கையில் WAO சம்பந்நதப்பட்டவர்களிடம் முன்மொழியந்துல்லது.

இந்த அறிக்கை  தயாரிக்கப்பட்ட  நோக்கம் பற்றி விவரிக்கும் பொழுது லைனி வெசிச் “இந்த அறிக்கையின் முக்கிய நோக்கம்  என்னவென்றால் மனித கடத்தல்களைப் பற்றி சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதாகும். மனிதக்கடத்தல்கள்  மற்றும் மனிதனைய மீரல்கள் என்பது தனி நபரின் பிரச்சினை அல்ல. இவை சமுதாயத்தின் பிரச்சினை என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் முதலில் உணர வேண்டும். நம் சமுதாயத்தில் அனைவரும் ஒற்றுமையாக கைக் கோர்த்து இந்த பிரச்சனையை எதிர்க்கொண்டால்தான் இதை முற்றிலும் நாம் ஒளிக்கமுடியும். இது நாம் ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறுவதும் அடுத்தவர்களை விரல்காட்டி பிரச்சனைகளைத் தள்ளிபோடும் காலம் அல்ல. மனித கடத்தல் எனப்படும் கொடிய சமுதாய புற்றுநோயைத் தடுத்து முற்றிலும் அழிக்க நம் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து ஒன்றாக செயல் படுவோம்” என்று எடுத்துரைத்தார்.

இதனிடையே, இந்த ஆய்வு அறிக்கை வெளியீட்டுக்குப் பிரதமர் துறையின் அமைச்சர் (ஆலுமை, நேர்மை மற்றும் மனித உரிமை துறை) மன்புமிகு Y.B. Datuk Paul Low Seng Kuan தமது சிறப்பு ஆதரவை வழங்கினார். மன்புமிகு Senator Datuk Paul Low-இன் முன்னால் சிறப்பு அதிகாரி (மனித உறிமை) Daniel Lo இந்த ஆய்வு அறிக்கையைத் திறனாய்ந்தார் என்பது குறிப்பிடக்தக்கது.

இந்த அறிக்கை மற்றும் மனித கடத்தல் பற்றி விவறிக்கும் போது Lo இவ்வாரு கூறினார்.

“மனித கடத்தல் மிகவும் நுட்பமாக மற்றும் அனைவரின் ஒத்துளைப்போடு கையாளப்பட வேண்டிய ஒரு சமுதாய பிரச்சனை, இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டபடி, நம்மை சுற்றி சிண்ட்ரெல்லாஸ், ரேபன்ஜெல்ஸ் மற்றும் ஒளிவர் டிவீட்ஸ் போன்ற அழகு பெண்கள் இந்த மனித கடத்தல் சம்பவத்தால் பாதிக்கபடுகின்றனர். ஆகவே, இவர்களைக் கண்டறிந்து தகுந்த பாதுகப்பு மற்றும் நீதியை வழங்காவிடில் இவர்களை ஒரு சராசரி மனிதர்க்குறைய உறிமைகள் மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழும் தகுதி கேள்விக்குறி ஆகிவிடும்.”

Comments (0)

Leave a Reply

Back To Top