Skip to content

நமக்கு ஒரு பாலியல் துன்புறுத்தல் சட்டம் தேவை

அண்மையில், பல பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு மத்தியில், எலும்பியல் மருத்துவர் ஒருவர் மேல் விசாரணை நடத்தப்படுவதற்கிடையில் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஒரு துணை அமைச்சரின் உதவியாளர் ஒருவர், துணை அமைச்சருடன் சென்றிருந்தபோது, மருத்துவ பரிசோதனை அறையில் கண்மருத்துவர் ஒருவறை பாலியல் ரீதியாக  துன்புறுத்தியதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்குகள் பொதுமக்கள் கவனத்தை பெருமளவில் ஈர்த்திருந்தாலும், இவை மறைந்திருக்கும் மிகப்பெரிய சூழ்நிலையின் சிறிய பகுதியே; ஏனெனில் செய்யப்படும் ஒவ்வொரு புகாரிற்கும், புகார் செய்யப்படாமல் செல்லும் நிகழ்வினங்கள் பல உள்ளன.

பொறுப்புடைமை இயக்கமுறைகள் பலவீனமாக இருக்கும்போது, வேட்டையாடுபவர்கள் துணிச்சலுடன் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதுமட்டுமின்றி தண்டனைப் பயமின்றி தொந்தரவு செய்கின்றனர்.

நம்முடைய தற்போதைய பாலியல் துன்புறுத்துதலுக்கான சட்ட கட்டமைப்பு  தீவிரமாக குறைப்பட்டுள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பும் அளிக்கவில்லை. எனவே, பாலியல் துன்புறுத்தல் சட்டம் சட்டமாக்கப்பட வேண்டும்.

தற்போது, நமக்குள்ள பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடைமுறை குறியீடு (Code of Practice on the Prevention and Eradication of Sexual Harassment in the Workplace), முதலாளிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை உள்ளுக்குள்ளே கையாள வழிகாட்டுதல்களை  வழங்குகிறது. எனினும், இக்குறியீடு தன்னார்வ அடிப்படையில் செயல்படுவதால், முதலாளிகளை அதனை செயல்படுத்த அல்லது செயல்படுத்த வேண்டாம் என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கிறது.

பொது சேவையில் பணிபுரியும் இடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்துதலை கையாளும் வழிகாட்டுகள் (Garis Panduan Mengendalikan Gangguan Seksual di Tempat Kerja Dalam Perkhidmatan Awam) ஒன்று உள்ளது. இருப்பினும், இவை வெறும் வழிகாட்டுதல் மட்டுமே மற்றும் பொதுத்துறை ஊழியர்களை மட்டுமே உள்ளடக்குகிறது.

வேலைவாய்ப்பு சட்டம் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க முதலாளிகள் மீது கட்டாயப்படுத்துகிறது.  எனினும், புகார் “அற்பமான, தவறான நோக்கங்களுடன் அல்லது  நன்னோக்கத்துடன் செய்யப்படவில்லை” என்று முதலாளிகள் நம்பினால், அவர்கள் விசாரணை செய்யாமல் இருக்க தேர்வு செய்யலாம். இதன்  விளைவாக, இத்தகைய வழக்குகள் முதலாளிகளின்  நல்லெண்ணத்தைப் பெரிதும் சார்ந்துள்ளதையும் அதிகார சமமின்மை  பிரச்சினையையும்  முன்வைக்கின்றன.

மேலும், வேலைவாய்ப்பு  சட்டம், விசாரணையின்போதும், அதற்கு பின்னரும் தப்பிப்பிழைக்கும்  நபரின் உரிமைகள், தீர்வழிகள்  மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வெளிக்கோடிடவில்லை. அச்சட்டம் முதலாளிகளைப்  புகார்களை  விசாரிக்க மட்டுமே பரிந்துரைக்கிறது. இந்த வேலைவாய்ப்பு சட்டம், சபா அல்லது சராவாக் ஆகியவற்றை உள்ளடக்கவில்லை.

ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இரண்டு தாபுங் ஹாஜி ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு திருப்புமுனை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, துன்புறுத்தல்  குற்றச்செயலை அறிமுகப்படுத்தியது.  அப்படியென்றால், பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இழப்பீடு பெறலாம். எனினும், பாலியல் துன்புறுத்துதலில் இருந்து  தப்பிப்பிழைத்தவர்களுக்கு ஒரு உரிமையியல் (சிவில்) வழக்கு தாக்கல் செய்ய, அதிக பணம் மற்றும் நேரம் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, வழக்குகள் பொது நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அவர்களின் அந்தரங்கத்தன்மை காப்பாற்றப்படாது.

தற்போதைய  சட்ட கட்டமைப்பின் வரம்புகள், மலேசியாவில்  பாலியல் துன்புறுத்தலுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அச்சட்டம்  பின்வருபவற்றை  உள்ளடக்கியிருக்க வேண்டும்:

முதலாவதாக, பாலியல் துன்புறுத்தலின் வரையறை, வாய்மொழி, காட்சி, சைகை, உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பாலியல் துன்புறுத்தல் சட்டம் வெறும் பணியிடங்களை மட்டுமன்றி எல்லா அமைப்புக்களையும் – கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், முதலியன; சபா மற்றும் சரவாக் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, பாலியல் துன்புறுத்தல் சட்டம்  ஒரு சுயாதீனமான தீர்ப்பாயம் போன்ற —  விரைவாக, மலிவாக மற்றும் தனிப்பட்ட முறையில் நீதி பெறுவதற்கு வழிவகுக்கும் – இயக்கமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், அச்சட்டம், பாலியல் துன்புறுத்தலுக்கான கோட்பாடுகளை அவசியமாக நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்கு  அறிவுறுத்த வேண்டும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வலுவான சட்ட பாதுகாப்பு இ்ருப்பதை உறுதிபடுத்துவது முக்கியம். ஏனேனில், அத பாலியல் துன்புறுத்தல் ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல எனும்  கருத்தைத் தெளிவாக முன் வைக்கும்.

சட்டங்களை இயற்றுவதுடன், நாம் நமது வழக்கங்களை மாற்றி தப்பிப்பிழைத்தவர்கள் அவர்களின் அனுபவங்களைக் குரல் கொடுக்க  அனுமதிக்க  வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் பற்றிய கலந்துரையாடல்கள் அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறும் வண்ணம் திசை மாற்றப்படுகின்றன. ஒரு ஹார்வார்ட் வர்த்தக விமர்சக கட்டுரையின் படி, தனிநபர்கள் எப்போதும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களைப் பகுத்தறிவில்லாதவர்களாக  கருதுகின்றனர் – இது பெண்கள்  பகுத்தறிவற்றவர்கள் மற்றும் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் எனும் ஸ்டீரியோ வகையால் உருவமைக்கப்பட்ட கண்ணோட்டம். அதுமட்டுமின்றி, தனிநபர்கள் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தல்களாகவும் குற்றம் புரிந்தவர்களைப் பாதிக்கப்பட்ட அப்பாவிகளாகவும் மாற்றியமைக்க முனைகின்றனர்.  இது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டும் கலாச்சாரத்தை நிலைத்து  நிற்க செய்கிறது. இது  நமது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிடுகிறது.

மேலும் இக்கட்டுரைப் பாலியல் துன்புறுத்தல் கொள்கைகள் எவ்வாறு பார்வையாளரின் தலையீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்துகிறது. இது பாலியல் துன்புறுத்தலைப் புகாரிக்கும் பொறுப்பைத் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே பகிர்ந்து கொள்வதாகும். இதன் வழி, பாலியல் துன்புறுத்துதலைச் சாத்தியமாக்கும் கலாச்சாரத்தை மாற்றுவதில் அனைவருக்கும் ஒரு  பங்கு   உள்ளது.

பாலியல் துன்புறுத்தலை எதிர்த்து முழுமையாக போராடுவதற்கு நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் தப்பிப்பிழைத்தவர்களுக்குத் தகுந்த நீதிக்கான வழி இருப்பதை உறுதிப்படுத்துவதைப் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை இயற்றுவதன் மூலம் ஆரம்பிக்கலாம்.

 

This Post Has 0 Comments

Leave a Reply

Back To Top