Skip to content

பாலின சமத்துவத்திற்கான சட்டம் மற்றும் விவாகரத்து அளிக்கப்பட்ட அனைத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து மலேசிய அரசாங்கத்தின் அனைத்துலக ஐக்கிய மன்ற செயல் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 28 ஜூலை 2017 இல், அனைத்துலக ஐக்கிய மன்றத்தின் CEDAW செயல் குழு கடுமையான கேள்விகள் மற்றும் பிரச்சனைகள் கொண்ட ஒரு முக்கிய பட்டியலை வெளியிட்டு மலேசிய அரசாங்கத்தின் நேரிடையாகத் தாக்கியது. பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த தற்போதைய நிலை என்னவென்று மலேசிய அரசாங்கம் தெளிவாக விளக்கும்படி அந்த பட்டியலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மலேசிய அரசாங்கம் அனைத்துலக ஐக்கிய மன்றத்தின் CEDAW செயல் குழுவிற்கு அனுப்பிய அறிக்கையில் மேல் குறிப்பிடப்பட்ட முக்கிய விவரங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CEDAW மன்றத்தின் உள்ளடக்கமான சட்டத்தை உள்நாட்டு சட்டத்தில் அமல்படுத்துவதை குறித்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தின் மீதான கேள்விகள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளது. இந்த சட்ட திருத்தமானது பாலின சமத்துவ சட்டம் மூலம் அமலாக்கம் பெறுவதை அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த குறிப்பிட்ட அறிக்கை வினவியுள்ளது. மேலும் லெஸ்பியன், இருபால் பாலியல் உறவு மற்றும் திருநங்கைகள் மீதான அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த பட்டியலில் வினவப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தகைய தரப்பினருக்கு முழுமையான அரசாங்க நிதி உதவியால் இயங்கும் மறுவாழ்வு முகாம்கள் அடங்கும். மற்றொரு நிலவரத்தில், தங்களது முதலாளிகளால் கொடுமைபடுத்தப்பட்ட புலம் பெயர்ந்த அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்புகள் குறித்தும் இந்த பட்டியலில் விரிவாக வினவப்பட்டுள்ளது. மேலும், திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் மீதான குடிமையாயில் மற்றும் ஷரியா சட்டங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இதில் வினவப்பட்டுள்ளது. இறுதியாக, நாட்டு குடியுரிமை பத்திரம் இல்லாத மற்றும் சிறை கைதிகளாக வாழும் பெண்களுக்காக போதிய சுகாதார வசதிகளை அரசாங்கம் செய்துள்ளது என்பதையும் இந்த பட்டியலில் வினவப்பட்டுள்ளது.

CEDAW செயற்குழுவின் இந்த கேள்விகளுக்கு மலேசிய அரசாங்கம் 6 வாரங்களில் பதில் அளிக்கவேண்டும். பின்பு, எதிர்வரும் பிப்ரவரி 2018 இல் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஆய்வில் மலேசிய அரசாங்கத்திற்கும் CEDAW செயல் குழுவிற்கும் நடந்த கேள்வி பதில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, CEDAWஇன் இந்த கேள்வி அறிக்கை குறித்து விவரிக்கும்பொழுது அதன் முன்னாள் செயற்குழு உறுப்பினரும் இந்நாட்டில் பெண்கள் உரிமை ஆர்வலருமான குமாரி சாந்தி தைரியம் இவ்வாறு கூறினார், “ CEDAW ஆய்வு என்பது சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சமத்துவத்திற்கான பெண்கள் உரிமைகளை நிறைவேற்ற அவர்களின் கடமைகளை அரசாங்கத்தின் இணக்கத்தை கண்காணிப்பதற்கான ஒரு சர்வதேச வழிமுறையாகும். இந்த அறிக்கை சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு சரியான நேரத்தில் சர்வதேச ஐக்கிய மன்றத்தில் சமர்பிப்பதன் மூலம் இந்நாட்டின் அரசாங்கம் பெண்களின் உரிமைகள் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறை மேலும் உறுதி படுத்தும் என்பது நிச்சயம்.”

இதனிடையே, மலேசியாவின் 2018 மதிப்பைவு பொதுவில் இருக்கும் அதே சமயத்தில் இந்நாட்டின் அரசாங்கத்திற்கு பெண்களின் அனைத்து உரிமைகளை அமல்படுத்தி, பாகுபாட்டை அகற்றி, சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான பரிந்துரைகளை மலேசிய அரசாங்கத்திற்கு இந்த அனைத்துலக மன்றம் வலியுறுத்தும் என்பது திண்ணம். மேலும், இந்த பரிந்துரைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிக்கும் பொழுது குமாரி தைரியம் இப்படி விளக்கினார். www.primumesse.lt personalo atranka bei mokymai, aukščiausio lygio vadovų ir darbuotojų paieška, Executive Search Lithuania Vilnius

இந்த பரிந்துரைகளானது நம் நாட்டு அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. CEDAW அதிகாரிகளின் இந்த ஆய்வின் முடிவை நாம் அனைவரும் கருத்தில் கொள்வது அவசியம். இந்த ஆய்வின் முடிவில்தான் நம் நாட்டின் பெண்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். இந்த ஆய்விற்கு பிறகு நம் நாட்டின் பெண்களின் முன்னேற்றத்தை நாம் கண்கூடாக காணலாம் என்அதில் சிறிதெனினும் ஐயமில்லை.” மற்றொரு நிலவரத்தில், 37 அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் எழுத்து பூர்வமான அறிக்கைகளை CEDAW செயல் குழுவிடம் சமர்பித்துள்ளது. மேலும், கடந்த 24 ஜூலையில் குறிப்பிட்ட முக்கிய பிரச்சனைகளைக் கோடிட்டு ஜெனிவாவில் உள்ள செயற்குழு அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து விளக்கங்கள் அழிக்கப்பட்டது.

“CEDAW, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உருவாக்கும் வகையில் அரசாங்கம் அதன் கடமைகளைப் பூர்த்தி செய்ய முக்கியமான வழிமுறைகளை வழங்குகிறது. மலேசிய அரசாங்கம் தவற விட்ட சில முக்கிய பிரச்சனைகளை இந்த செயல் குழுவிடம் நாங்கள் கோடிட்டு காட்டியுள்ளோம். அவற்றில் திருமண கற்பழிப்பு குற்றம் மற்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் சிறார் திருமணம் போன்றவை ஆகும். இந்த முக்கியமான பிரச்சனைகளைக் கடுமையான குற்ற  செயலாக பிரகடனப்படுத்துமாறு மலேசிய அரசாங்கதைத் தங்களின் கேள்வி அறிக்கையில் இந்த செயற்குழு கடுமையாக வலியுறுத்தியுள்ளது.” என்று ஜெனிவாவில் நடைபெற்ற அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வழக்குரைஞர் மன்றத்தின் தலைவரான ஹுய் யிங் கூறினார்.

CEDAW என்பது பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாட்டை அகற்றுவதற்கான மாநாடு மற்றும் சர்வதேச நாடுகளில் பெண்களின் மனித உரிமைகள் மீதான பிரதான சட்டங்களின் ஆதாரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. CEDAW அனைத்து கலாச்சாரத்திலும் , சமயத்திலும் மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த வழி காட்டுகிறது.

###

பாலின சமத்துவத்திற்கான செயற்குழு (JAG) :
  1. Women’s Aid Organisation (WAO)
  2. All Women’s Action Society (AWAM)
  3. Association of Women Lawyers (AWL)
  4. Justice for Sisters
  5. Perak Women for Women (PWW)
  6. Persatuan Kesedaran Komuniti Selangor (EMPOWER)
  7. Sabah Women’s Action Resource Group (SAWO)
  8. Sisters in Islam (SIS)
  9. Women’s Centre for Change (WCC Penang)

This Post Has 0 Comments

Leave a Reply

Back To Top